tamilnadu

img

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளின் 3ம் நாள் நிலவரம்

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளின் 3ம் நாளான இன்று இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கமும் கிடைத்துள்ளது.


இந்தாண்டின் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 3ம் நாளான இன்று தடகள வீராங்கனை சுவப்னா பர்மன் 5993 புள்ளிகளுடன் ஹெப்டதலான் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 4*400 மீட்டர் கலப்பினர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. மேலும், இந்திய தடகள வீராங்கனை சஞ்சீவினி ஜாதவ் 10 ஆயிரம் மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


இதன்மூலம் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 13 ஆக உயர்ந்துள்ளது. முதல் நாளான திங்களன்று இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. இரண்டாம் நாளான நேற்று நடந்த போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், தஜிந்தர்சிங் தூர் குண்டு எறிதலிலும் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.